August 22, 2007

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்




1908_ம் வருடம் அக்டோபர் முப்பதாம் தேதி உக்கிரபாண்டித் தேவருக்கும், இந்திராணி அம்மையாருக்கும்மகனாகப் பிறந்தார் முத்துராமலிங்கத் தேவர். அவர் பிறந்தநாள் அன்று, அந்த பசும்பொன் கிராமமே திருவிழாக்கோலம் பூண்டது. அதற்குக் காரணம் தேவரின் தந்தை மிகப்பெரிய செல்வந்தர். ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் உக்கிரபாண்டித் தேவர் என்றாலே தெரியும்விதமாக பிரசித்தி பெற்றிருந்தது அந்தக்குடும்பம். பிறந்தறு மாதத்திலேயே, அவரது அம்மா நோய் வாய்ப்பட்டு இறந்துவிட, அப்பா மறுமணம் செய்துகொண்டார். அதனால் முத்துராமலிங்கத் தேவரின் பாட்டி ராணியம்மாள் அவரை வளர்க்கும் பொறுப்பைப் பெற்றார்.கனிவு, வீரம், ஈகை, சகோதரத்துவம் போன்ற குணங்களோடு, தனது இளமையைத் துவங்கிய முத்துராமலிங்கத் தேவர், தன் வாழ்நாள் முழுவதும் அதே குணங்களோடு வாழ்ந்தார்.
அதேபோல், அவர் ஒரு சித்தர் என்கிற அளவிற்கு ஆன்மிகவாதியாகத் திகழ்ந்தார். `யாருக்காகவும், எதற்காகவும் தனது மத அடையாளங்களைமறைத்து வாழ முற்படக்கூடாது. அதே நேரத்தில், அந்த அடையாளங்களை இனம்காட்டி நமக்குள் நாம் பிரிவினையைத் தூண்டிக்கொள்ளக்கூடாது' என்பார்.
ஒருநாள் சிறுவனாக இருந்த முத்துராமலிங்கத் தேவரிடம், சிரியராக இருந்த ஒரு கிறிஸ்தவ பாதிரியார், ``நீ இந்து. உன்னை ஒன்று கேட்கிறேன்... இதோ இங்கே கீழே கிடக்கிறதே இந்தக் கல்லும் தெய்வமா?'' என்று சிறு கல் ஒன்றை எடுத்துக்காட்டிக் கேட்டார்.அதற்கு சிறிதும் முகமாற்றமில்லாமல் சிரித்தபடியே முத்துராமலிங்கத் தேவர் பதில்சொன்னார்.... ``ஐயா... ஒரு கல்லில் துணி துவைக்கலாம். ஒரு கல்லில் அம்மி அரைக்கலாம்...மற்றொரு கல்லில் சுவாமி சிலை வடிக்கலாம். ஆனால், துணி துவைக்கும் கல்லில் துணியை மட்டும்தான் துவைக்கமுடியும். அதை கடவுளாகத் தொழ முடியாது. அதேபோல அம்மிக்கல்லை அரைக்க பயன்படுத்துவதை விட்டுவிட்டு,கடவுளாக யாரும் கும்பிட மாட்டார்கள். சுவாமி சிலையும் அப்படித்தான்... அது வணங்குவதற்காக,தொழுவதற்காக மட்டும்தான். அதில் துவைக்கவோ, அரைக்கவோ முடியாது. ஆக... கல் என்பது ஒன்றுதான். அதில் மூன்று விதமான செயல்கள் நிகழ்கின்றன. அதனால், கீழே கிடக்கிற இந்தக் கல்லை எடுத்துஇதுவும் தெய்வமா என்று நீங்கள் கேட்டால் எப்படிய்யா...?'' _ சிறுவனான முத்துராமலிங்கத் தேவர் இப்படிக்கேட்க, அவரின் விளக்கத்தால் வாயடைத்துப்போன பாதிரியார், அன்றிலிருந்து தேவருக்கு பள்ளிக்கூடத்தில் இரட்டிப்பு மதிப்பைக் கொடுக்கத் துவங்கினார்.
வீரத்தில் முத்துராமலிங்கத் தேவருக்கு நிகர் அவர்தான் என்பது போன்று, அவரது வாழ்நாளில் பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.அவரது வாலிபப் பருவத்தில், ஒருநாள் தனது நண்பர்களோடு தேக்கடியில் பெரியாறு உற்பத்தியாகும் இடத்தைக் காண்பதற்காக இயந்திரப் படகில் சென்றார். அங்கே அவர்கள் குளிக்க முற்பட்டபோது, ஒரு பெண் பரபரப்பாக ஓடிவந்தாள்.``தம்பி என் பசுவை புலி அடிச்சிடுச்சி...'' என்று அழ ரம்பிக்க, சட்டென்று முத்துராமலிங்கத் தேவர், கரையை அடுத்திருந்த புதர்கள் அடங்கிய பகுதிக்குள் ஓட ஆரம்பித்தார்.அந்தப் பெண்ணும் சற்றுத் தயக்கமான முகத்தோடு தேவர் ஓடிய திசையை நோக்கி ஓடினாள். `என்னாகுமோ?' என்று அதிர்ச்சியாய் நண்பர்கள் காத்திருக்க... உடல் முழுவதும் காயத்தோடிருந்த பசுவோடு திரும்பி வந்தார் தேவர். அவருக்குப் பின்னால் சிரித்த முகத்தோடு அந்தப் பெண் வந்தாள்.``ரொம்ப நன்றிங்க தம்பி... மாட்டை அடிச்ச புலி உங்களை ஏதாச்சும் செஞ்சிடுமோன்னு பயந்துதான் வந்தேன்... நீங்க என்னடான்னா... அந்தப் புலியையே அடிச்சித் துரத்திட்டு என் மாட்டைக் காப்பாத்திட்டீங்களே...'' என்று சொல்லி நகர... நண்பர்கள் முகத்தில் வியப்பு தெரிந்தது.அதேபோன்று, வேறொரு சமயம்... ஒரு படகோட்டி தவறவிட்ட இன்ஜினின் ஒரு பகுதியை, அறுபத்தேழு அடி ஆழம் தண்ணீருக்குள் சென்று எடுத்துவந்து கொடுத்து ஆச்சரியமூட்டியிருக்கிறார்.வீரத்தில் தேவருக்கு நிகர் தேவர்தான்.
இளமைக்காலத்தில் நீச்சல், மல்யுத்தம், வாள்வீச்சு, குதிரையேற்றம் என எல்லா கலைகளும் அவருக்கு கைவந்த கலையாக இருந்தன.
தேவரின் முதல் மேடை முழக்கமே இடிமுழக்கமாக இருந்தது.சாயல்குடியில் விவேகானந்தர் வாசகசாலையில் விவேகானந்தரைப் பற்றியும் அவரது ஆன்மிக சிந்தனைகளைப் பற்றியும் முத்துராமலிங்கத் தேவர் பேசியதைக் கேட்டு அத்தனைபேரும் ஆச்சரியத்தில் வாய்பிளந்திருக்கிறார்கள் .
அந்தக் காலத்தில் தலைசிறந்த தேசியத் தலைவராகத் திகழ்ந்த எஸ்.ஸ்ரீனிவாச ஐயங்கார், முத்துராமலிங்கத்தேவரின் நல்ல குணங்களை ஆன்மிக சிந்தனையும் வீரத்தையும் கண்டு அரசியலுக்கு வலுக்கட்டாயமாக அவரை அழைத்து வந்தார்.பின்னாளில் முத்துராமலிங்கத் தேவரின் அரசியல் சாணக்கியத்தை, திறமையை, ஆளுமையை, நெறிதவறா பண்பைப் பார்த்து உள்ளம் மகிழ்ந்தவராக, ``தெய்வீக உடலில் தேசியப்புள்ளிகளைக் கொண்ட சேது வேங்கைமுத்துராமலிங்கத் தேவர்'' என்று பாராட்டினார்.
அரசியல் சாணக்கியர் என்று பெயர்பெற்ற மூதறிஞர் ராஜாஜிகூட தேவரை... ``இந்திய சுதந்திர யுத்தத்தின் தென்புலத்திற்கு என்னைப் பார்த்தன் என்று புகழ்கிறார்கள். அந்த புகழுரையை நான் ஏற்பதாக இருந்தால்முத்துராமலிங்கத் தேவர்தான் என்னுடைய சாரதி...'' என்று அகமகிழ்ந்து கூறினார்.
1937_ம் வருடம் பொதுத்தேர்தலின்போதுதான், முதன்முதலாக முத்துராமலிங்கத்தேவர் அரசியலுக்குள் நுழைந்தார். அவர் அன்று அரசியல் களத்தில் கால் வைக்காமல் இருந்திருந்தால் தென்புலத்தில் காங்கிரஸ் அடியெடுத்துவைத்திருக்க முடியாமல் போயிருக்கும். தமிழகத்தில் காங்கிரஸின் முதல் வெற்றிக்கு அவர்தான் காரணமென்பதை காங்கிரஸ் வரலாற்றில் பதிவு செய்தார்.
1937 முதல் 1962 வரை நடந்த பொதுத்தேர்தல்கள் எல்லாவற்றிலும் அவர் வெற்றிபெற்று, `நான் மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றவன்'என்பதை உணர்த்தினார். இத்தனைக்கும் போட்டியிட்ட தொகுதிக்குச் செல்லாமலே... `அவர்களின் கஷ்டங்களை,தேவைகளை, உணர்வுகளை உணர்ந்தவன் நான்' என்பதை நிரூபித்து வெற்றி பெற்றார்.
ஒருமுறை அவரைத்தேடி அமைச்சர் வாய்ப்பு வந்தபோதுகூட, அவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.தேவர் ஆங்கிலத்தில் புலமைவாய்ந்தவர். ஆனாலும், `தமிழ்தான் எனது மூச்சு' என்பார். `நான் ஆங்கிலம் கற்றது, ஆங்கிலம் தெரிந்தவர் நம்மை ஏமாற்றிவிடக் கூடாது என்பதற்காக' என்று சொல்வார். தேவர் ஒருநாள் மேடையில் மிகவும் உணர்ச்சிகரமாய்ப் பேசிக் கொண்டிருக்கும்போது யாரோ ஒருவர் இடைநுழைந்து தேவரின் காதில் கிசுகிசுப்பாக ஏதோ சொன்னார். சட்டென்று கண்கள் சிவப்பாக... அனல்தெறிக்கும் கோபத்துடன் பேச ஆரம்பித்தார்... ``காமராஜரை நீதிக்கட்சியைச் சார்ந்த யாரோ சிலர் கடத்திக் கொண்டுபோய், எங்கோ மறைவிடத்தில் ஒளித்து வைத்திருப்பதாக எனக்குத் தகவல் வந்திருக்கிறது. அவரை யார் கடத்திக்கொண்டு போனது... எங்கே அவரை ஒளித்து வைத்திருக்கிறார்கள் என்பதுஎல்லாமே எனக்குத் தெரியும். அவரை ஒழுங்கு மரியாதையாக இந்தக் கூட்டம் முடிவதற்குள் இங்கே கொண்டு வந்து மேடையில் என்னிடம் சேர்க்கவேண்டும். இல்லையென்றால் நடப்பதே வேறு...'' என்று கர்ஜிக்கும் விதமாக, கோபமாகப் பேசிவிட்டு மீண்டும் கனிவான பேச்சைத் தொடர்ந்தார். அவருக்குப்பின் பலர் பேச...சில மணி நேரம் கூட்டம் நடந்தது. என்ன ஆச்சரியம்! கடைசி பேச்சாளர் பேச்சை முடிக்கும் முன்பாகவே தேவர் சொன்னதுபோல் காமராஜரை மேடையில் கொண்டுவந்து சேர்த்துவிட்டு தலைமறைவானார்கள் நீதிக்கட்சியினர். திருப்பரங்குன்றத்தில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் ராஜாஜியை எதிர்த்து காமராஜரை நிறுத்தி, அவரை தமிழகத்தின் காங்கிரஸ் தலைவராக வெற்றிபெறச் செய்தவர் தேவர்.
பார்வர்ட் பிளாக் என்ற புதிய கட்சியை நேதாஜி துவக்கியபோது. அது காங்கிரசுக்குள்ளேயே தீவிரவாதிகளைக் கொண்டதொரு சிறிய பிரிவாகத்தான் செயல்பட்டது. அதில் என்.ஜி. ரங்கா, கே.எம்.நாரிமன்,சேனாபதி பாபட், சரத் சந்திரபோஸ் கியோரோடு, மத்திய கமிட்டி உறுப்பினராகச் செயலாற்றியவர்முத்துராமலிங்கத் தேவர். 3.9.1939_அன்று சென்னை கடற்கரையில், தேவரின் வேண்டுகோளை ஏற்றுப் பேசிய நேதாஜி, ``தேவரைப் பார்க்கும்போது எனக்குப் பெருமையாக இருக்கிறது. அடுத்த பிறவியில் நானும் தமிழனாகப் பிறக்க விரும்புகிறேன்'' என்றார்.
அதோடு மட்டுமில்லாமல்... நேதாஜியை அழைத்து மதுரையில் மிகப் பெரிய கூட்டம் நடத்த தேவர் ஏற்பாடு செய்ய... அலைகடலென திரண்டுவிட்ட கூட்டத்தைப் பார்த்து நேதாஜி, `தேவருக்கு இவ்வளவு செல்வாக்கா?'என்று மகிழ்ந்து போனார். னால் அந்தக் கூட்டமே, ஆங்கிலேய அரசு தேவரை நிழலாகக் கண்காணிக்கும் நிலைக்குத் தள்ளிவிட்டது.பிரிட்டனில் நடந்த `இரண்டாம் உலகப் போரை எப்படி எதிர்கொள்வது?' என்ற விவாதத்தில் கலந்துகொண்டு மதுரை திரும்பிய தேவரை, ஆங்கிலேய அரசு கைது செய்து சிறையிலடைத்தது. ஆறு ண்டுகள் சிறைவாசத்திற்குப் பிறகு தேவர் விடுதலையாகி வெளியே வந்தபோது, நேதாஜி வெளிநாட்டில் இருக்கிறார் என்ற செய்தியை அறிந்தார்.
இந்தியா சுதந்திரமடைந்தபிறகு தேசியம், தெய்வீகம் இரண்டையும் தனது இரு கண்களாகக் கருதி,நேர்மையான அரசியல் தலைவராக வாழ்ந்தார்.
``சாதியையும் நிறத்தையும் பார்த்து மனிதனை மனிதன் தாழ்வுபடுத்துவது மிகப்பெரிய அநியாயம். கடவுள் மனித குலத்தைத்தான் படைத்தானே தவிர, சாதியையும் நிறத்தையும் அல்ல... சாதியும், நிறமும் அரசியலுக்கும்கிடையாது... ஆன்மிகத்திற்கும் கிடையாது...'' என்பது முத்துராமலிங்கத் தேவரின் தாரக மந்திரம்.முத்துராமலிங்கத் தேவரின் வாழ்வியல், ஒவ்வொரு அரசியல் அபிமானிகளுக்கும் ஓர் அரிச்சுவடி