October 1, 2007

CASTE SYSTEM IN CHOLAS
to quote the exact lines from the book "சோழர் காலத்தில் அடிமை முறை இன்னும் விரிவாக்கம் பெற்றது. அடிமைகள் குறித்த பல கல்வெட்டுச் சான்றுகள் சோழர் காலத்தில் கிடைக்கின்றன. போர் அடிமைகள் பெரும்பாலும் பெண்களாகவே இருந்தனர். (34) வீட்டடிமைகள் என்ற வழக்கமும் இருந்தது. சுந்தரர் கதை இதற்குச் சிறந்த உதாரணம் (35) இவற்றை விரிவாகக் கூறிவிட்டுப் பின்வரும் முடிவுகளை ஆ. சிவசுப்பிரமணியம் முன் வைக்கிறார்.(1). அடிமை முறை சோழர் காலத்தில் நிலவியது, (2). அந்தணர் அடிமையாகும் வழக்கமில்லை, (3). அடிமையாவோர் அடிமையாளருக்கு ஓலை எழுதிக் கொடுக்கும் பழக்கமுண்டு. இதற்கு ஆளோலை என்று பெயர், (4). ஆளோலையில் எழுதிக் கொடுத்தவரின் கையெழுத்துடன் சாட்சிக் கையெழுத்தும் இருக்கும், (5). தன்னை மட்டுமின்றி, தன் பரம்பரையினரையும் அடிமையாக எழுதிக் கொடுக்கும் பழக்கமுண்டு, (6). அடிமை தன் பணியில் தவறினால் அது குறித்து அடிமையாளன் ஊர் வழக்கு மன்றத்தில் முறையிடலாம், (7). தக்க ஆளோலை இருப்பின் அடிமையாளனுக்கு அடிமையின் மேலுள்ள உரிமையை ஊரவை உறுதிப்படுத்தும் (36) சோழர் காலத்தில் கோயில்கள், மடங்கள் ஆகியவற்றில் அடிமைகள் இருந்தனர். இவற்றிற்கு அடிமைகளைத் தானமாகக் கொடுத்தனர்.அடிமைகள் வேளாண்மையிலும், அது சார்ந்த தொழில்களிலும் இடம் பெற்றிருந்தனர். “உவச்சர் பறை கொட்டும் பணியினைச் செய்தனர். அடிமைகளுக்கு முத்திரையிடப்பட்டது. (சைவத்தில் உள்ள தீக்கையும், வைணவத்தில் உள்ள சமாச் சரணமும் இந்த வகையைச் சார்ந்தவை) அடிமைகளுக்குக் கடும் தண்டனைகளும் விதிக்கப்பட்டன. (பக். 40)."

2.2. for clarification of caste system in cholas rulehttp://ta.wikipedia.org/wiki/சோழர்#.E0.AE.9A.E0.AF.8B.E0.AE.B4.E0.AE.B0.E0.AF.81.E0.AE.AE.E0.AF.8D_.E0.AE.9A.E0.AE.BE.E0.AE.A4.E0.AE.BF.E0.AE.AF.E0.AE.AE.E0.AF.81.E0.AE.AE.E0.AF.8D
சோழர்கள் சாதிய அடுக்கமைவையும் அமைப்பையும் ஏற்று, அதற்கு கட்டுப்பட்டு ஆட்சிபுரிந்தார்கள். இவர்கள் காலத்துக்கு முன்னரேயே தீட்டுக் கோட்பாடு தமிழ்ச் சமூகத்தில் வழங்கியதானாலும், இதை அமுல்படுத்துவதில் சோழரின் பங்கும் குறிப்பிடத்தக்கது. "முதலாம் இராசராசனுடைய கல்வெட்டொன்று 'தீண்டாச்சேரி' என ஒரு ஊர்ப் பகுதியைச் சுட்டுகிறது என்றும், பாகூரில் உள்ள திருமூலநாதர் திருக்கோவில் கல்வெட்டொன்று (முதலாம் இராசராசன் காலத்தைச் சேர்ந்தது - கி.பி. 10 ஆம் நூற்றாண்டு) ஓர் ஊரில் வாழ்ந்த ஒரு மக்கள் பிரிவினரைத் 'தீண்டாதார்' எனக் குறிப்பிடுகின்றது என்றும் பேராசிரியர் கோ. விசயவேணுகோபால் விளக்குகிறார். மேலும் சோழர் காலத்தில்தான் இந்தத் தீண்டத்தகாதவர் 'சேரிகள்', அரசாணையின்படி அமைக்கப்பட்டுள்ளன. மேடான இடத்தில் மேல் சாதியினரும் பள்ளமான இடத்தில் கீழ்ச் சாதியினரும் குடியிருக்க வேண்டும். அப்பொழுதுதான் முற்றத்தில் வரும் மழைத்தண்ணீர் கூடத் தீட்டுப்படாததாய் இருக்கும். மேலும் குனிந்து போகும்படியாகத்தான் குடிசை கட்ட வேண்டும். ஜன்னல் வைத்துக் கட்டக் கூடாது. சுவருக்கு வெள்ளையடிக்க கூடாது. பிணத்தைச் சும்மாதான் எடுக்க வேண்டும். பொதுக் குளத்தில் தண்ணீர் எடுக்கக்கூடாது. என்றெல்லாம் ஆணை போட்டு" அமுல்படுத்தியிருப்பதாகத் தெரிகிறது. இந்த ஆணைகள் அக்காலத்தில் நிலவிய அடக்குமுறைகளை எடுத்துக்காட்டுவதாக ஆய்வாளர் கூறுகிறார்கள். [4]பிராமணர்களே சோழ நிர்வாகத்தின் முக்கியமான பதவிகளை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். மற்றவர்கள் அவர்களுக்கு வேலை செய்தார்கள். பிராமணர்கள் அல்லாதோர் ஒன்றாக செயல்படுவதை தடுப்பதற்கு சாதிச் சார்பையும், சாதி ஒற்றுமையையும், சாதி சமூகங்களையும் பிராமணர்கள் ஊக்குவித்தார்கள்.
3.. http://newsbytes.curtin.edu.au/archive/june-03/fa_60-o3-chola.html
. to quote the lines from the research book
"The temples made an extraordinary powerful ideological statement. Just like the rulers in Europe used the Christian church, the Chola kings were the protectors of Hinduism and the caste system."


4. from jayakanthan's chola navigation package


சோழர் காலச் சமுதாயத்தில் சாதி வேறுபாடுகள் ஆழமாக இருந்தன. பிராமணர்கள் ஏற்றம் பெற்றிருந்த சாதியினராக விளங்கினர். அகரங்கள், அக்கிரகாரங்கள், சதுர்வேதி மங்கலங்கள் என்ற பெயர்களில் பிராமணர்களுக்குத் தனிக்கிராமங்கள் உருவாக்கப்பட்டன. கோவில்கள், மடங்கள் ஆகியன இவர்களின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தன. இலவச உணவும் உறையுளும் நல்கி வேதக்கல்வி புகட்டும் வேதபாட சாலைகளும் இவர்களுக்கென்றே மன்னர்களால் நிறுவப்பட்டன.பிராமணர்களுக்கு அடுத்த நிலையில் நிலக்கிழார்களாக விளங்கிய வேளாளர்கள் இருந்தனர். கோவில் நிலங்களின் மீது பிராமணர்களுடன் இணைந்து இவர்கள் ஆதிக்கம் செலுத்தினர். இவ்விரு சமூகத்தினரையும் தவிர பல்வேறு கைவினைத் தொழில் செய்து வந்தவர்களும், உழுகுடிகளான, பள்ளர், பறையர் ஆகியோரும் தனித்தனி சாதிகளாக அழைத்திருந்தனர். சோழர் காலச் சாதிகள் வலங்கையர், இடங்கையர் என்ற இரு பிரிவுகளாகப் பிரிக்கப் பட்டிருந்தன. இவ்விரு பிரிவுகளின் உருவாக்கம் குறித்து வினோதமான புராணக் கதைகள் உருவாகியுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் 98 குலங்கள் இடம் பெற்றிருந்தன. வலங்கையர் இடங்கையரிடையே சில நேரங்களில் பூசல்களும் மோதல்களும் நிகழ்ந்தன. பெரும்பாலும் இடங்கையினர் துன்புறுத்தலுக்கு ஆளாகி வந்தனர். சில நேரங்களில் வலங்கையினர் இடங்கையினர் ஆகிய இரு வகுப்பினரும் வேறுபாடுகளைத் துறந்துவிட்டு பிராமணர்களையும், வேளாளர்களையும் எதிர்த்துப் போராடியுள்ளனர். பெரும்பாலும் இப்போராட்டம் வரி எதிர்ப்பை மையமாகக் கொண்டேயிருந்தது.தீண்டாமை சோழர் காலத்தில் வேர்விட்டு வளர்ந்திருந்தது. பறையர்களுக்கென்று தனிக்குடியிருப்புகள் இருந்தன. தீண்டாச்சேரி என்று இக்குடியிருப்புகள் அழைக்கப்பட்டன. ஆயினும் இவர்களில் சிலர் சொத்துரிமை உடையவர்களாகவும் இருந்தனர்.ஆடலிலும், பாடலிலும் வல்ல பெண்டிரை விலைக்கு வாங்கியும், வன்முறையில் கைப்பற்றிக் கொண்டும் கோவில் பணிகளில் ஈடுபடுத்தினர். கோவிலைப் பெருக்கி மெழுகுதல், மாலை தொடுத்தல் தேவாரம் ஓதுதல், நடனமாடுதல், நாடகங்களில் நடித்தல் ஆகியன இவர்களின் முக்கியப் பணிகளாக அமைந்தன. தலைக்கோலிகள், தளிச்சேரிப் பெண்டுகள், பதியிலார், தேவரடியார் என்று இவர்களுக்குப் பெயர்கள் வழங்கின.அடிமைமுறை சோழர் காலத்தில் நிலை பெற்றிருந்தது. மன்னர்களும், வளம் படைத்தவர்களும் ஆண்களையும், பெண்களையும் விலைக்கு வாங்கிக் கோவில்களுக்கும், மடங்களுக்கும் தானமாக வழங்கினர். அடிமை விற்பனை, ஓலையில் பத்திரம் போல் பதிவு செய்யப்பட்டது. இது ஆளோலை, ஆள்விலைப் பிரமாண இசைவுத் தீட்டு, அடிமை விற்பனைப் பத்திரம் எனப் பெயர் பெற்றது. வறுமையின் காரணமாகத் தம் குடும்ப உறுப்பினர்களை விற்பதும் தம்மைத்தாமே விற்றுக் கொள்வதும் நிகழ்ந்துள்ளன. ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த அடிமை தீண்டா அடிமை என்றழைக்கப்பட்டார். இவ்வாறு அடிமைகளானவர் மீது மாடுகளுக்கு இடுவது போல் இலச்சினை பொறிக்கப்பட்டது.
5. திருத்தக்கதேவர் - சில சிந்தனைகள்கு. மகுடீஸ்வரன்


சமணர் சங்கம் மருவிய காலத்திலேயே தொடர்நிலைச் செய்யுளான ‘சிலப்பதிகாரத்தை’ச் செய்தனர். சோழர் கால ஆரம்பத்தில் சிந்தாமணி, சூளாமணி என்பவற்றை இயற்றினர். “சோழப்பெரு மன்னர் காலத்தில் தமிழ்நாட்டு மக்கள் வாழ்வு சிறக்கிறது - செல்வச் செழிப்பு மிகுகின்றது. அக்காலம் காவியகாலம் எனப்படுகிறது. காவியம், மக்கள் இவ்வுலகிலே வாழவேண்டிய நெறியை எடுத்துக்கூறுகிறது எனலாம். பூரணத்துவம் பெற்ற வாழ்வு எது என்பது பற்றிய சோழர் காலச்சிந்தனை, சிந்தாமணி, சூளாமணி, கம்பராமாயணம் என்பன எடுத்துக்கூறும் கதைகளிலிருந்து புலனாகிறது” என ஆ. வேலுப்பிள்ளை கூறுவார். பூரணத்துவம் பெற்ற வாழ்வைக் கூறுவதாகக் கூறப்படும் சிந்தாமணி கி.பி. 12 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டதை இலக்கிய வரலாற்று ஆசிரியர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். ஆனால் அந்த நூலைப்படைத்த திருத்தக்கதேவர் தோன்றிய ஊரைக்கூறுவதில் பல மாறுபாடுகள் காணப்படுகின்றன. ‘திருத்தகு மாமணியான தேவர் பிறந்தது கொங்கு நாடே’ அதுவும் பெருவஞ்சி என அழைக்கப்படும் தாராபுரத்திற்கு அருகிலுள்ள ‘வீராட்சி மங்கலம்’ என்பதைச் சான்றுகளுடன் காண்போம்.சோழர் குலமா?கி.பி. 1868 இல், முதன் முதலில் சிந்தாமணியின் நாமகள் இலம்பகம் மட்டும் ரெவரெண்ட் எச். பவர் என்பவரால் பதிப்பிக்கப்பட்டது. ஆனால் 1887இல் தான் உ.வே.சாமிநாத அய்யங்காரால் நூல் முழுமையாகப் பதிப்பிக்கப்பட்டது. உ.வே.சா., சிந்தாமணி முன்னுரையில் நூலாசிரியர் வரலாறு கூறுமிடத்து “இந்நூலாசிரியராகிய திருத்தக்க தேவருடைய காலம், இடம், அவரை ஆதரித்த பிரபுவின் பெயர் முதலிய வற்றுள் யாதொன்றும் தமிழ் நூல்களால் வெளிப்படையாக விளங்கவில்லை.‘முந்நீர் வலம்புரி (3143) என்னும் ஓம்படைச் செய்யுளின் உரையில் இந்நூலாசிரியரை, ‘சோழர் குலமாகிய கடலிலே பிறந்த வலம்புரி’ என்று நச்சினார்க்கினியர் எழுதியிருந்ததால், இவர் சோழர் குலத்தில் பிறந்தவரென்பதும் நச்சினார்க்கினியருரைச் சிறப்புப் பாயிரத்தில் உள்ள ‘வண்பெருவஞ்சிப் பொய்யா மொழிப்புகழ் மையறு சீர்த்தித் திருத்தகு முனிவன்’ என்னும் வாக்கியத்தால், இவன் வஞ்சியென்னும் ஊரிலிருந்த பொய்யாமொழி என்பவரால் புகழ பெற்றவர் என்பதும் வெளியாகின்றன” என்பர். நச்சினார்க்கினியரின் உரையைக் கொண்டே ‘சோழர்குலம்’ என்ற சொல்லின் மூலம் திருத்தக்க தேவர் சோழநாட்டைச் சேர்ந்தவர் என்று இலக்கிய வரலாற்று ஆசிரியர்கள் முடிவுக்கு வருகின்றனர். சோழ குலத்தின் பல கிளைகள் கொங்கு, தொண்டை மண்டலங்களையும் ஆண்டுள்ளனர் என்பது இங்குக் குறிக்கத்தக்கது
6.வீராணம் ஏரி _ ma .sivagnanam


சென்னையின் குடிநீர் ஆதாரமான வீராணம் ஏரியைப்பற்றிப் பார்ப்போம். வீரநாராயணபுரம் ஏரி என்பதே காலப்போக்கில் மருவி வீராணம் ஏரி என்றாயிற்று. இப்போதய கடலூர் மாவட்டத்தில் இருக்கும் இவ்வேரி சோழர் காலத்தில் எடுப்பிக்கப் பட்டது. ‘பொற்கூரை வேய்ந்த தேவர்’ என்றழைக்கப்படும் பராந்தக சோழர் இவ்வேரியை தூர் வாரி கரை எழுப்பினார்.அப்பொழுதைய கால்த்தில் இவ்வேரி அமைந்த இடம், பாரேழு வள்ளல்களில் ஒருவரான ‘வல்வில் ஓரி’யின் வழி வந்த கடம்பூர் சிற்றரசுக்கு அருகில் இருந்தது
7. பண்பாட்டின் வாழ்வியல் -தொ.பரமசிவன்.
extract from the book


பெருஞ்சாலை, ஊர்தி, பாலங்கள் என்றவாறு போக்குவரத்து வசதியற்ற அக்காலங்களில் அரசர்களோ, அரசியரோ பிற ஊர்களில் இறந்து இருந்தால் அங்கிருந்து தலைநகருக்கோ, அரண்மனைக்கோ கொண்டு வரவாய்ப்பில்லை. நெடுந்தொலைவு சென்று நடந்த போர்களில் அரசன் இறந்திருந்தாலோ இதே நிலைதான். எனவே தான் சோழர் காலக் கல்வெட்டுக்கள் ‘தொண்டைமான் ஆற்றூர்த் துஞ்சிய தேவர்’ ‘காஞ்சிபுரத்து பொன்மாளிகைத் துஞ்சிய தேவர்’ என்று அரசர்கள் இறந்த இடங்களைக் குறிப்பிடுகின்றன. அருப்புக்கோட்டைக்கு அருகிலுள்ள சுந்தரபாண்டியம் என்னும் ஊரிலுள்ள கோயில் சோழன் தலை கொண்ட கோவீரபாண்டியனின் அண்ணன் சுந்தரபாடியனின் பள்ளிப்படைக்கோயில் என்று கல்வெட்டு அறிஞர் வேதாசலம் கண்டுபிடித்துள்ளார். எனவே இதன் காலம் கி.பி.பத்தாம் நூற்றாண்டு ஆகும்.
8. kalvattu from திருச்செம்பொன்பள்ளி (செம்பனார்கோயில்)

சிறப்புக்கள்
இத்தலத்திற்கு இலக்குமிபுரி, இந்திரபுரி, கந்தபுரி என்ற பெயர்களுமுண்டு.
இக்கோயில் கோச்செங்கட் சோழனின் திருப்பணியாகும்.
கீழே பதினாறும் மேலே பதினாறும் இதழ்களையுடைய தாமரை போன்ற ஆவுடையாரில் மூலவர் - இலிங்கத் திருமேனி - சுயம்பு மூர்த்தமாக காட்சிதருகிறார்.
இங்குள்ள வட்டவடிவமான ஆவுடையார் உள்ள திருமேனி திருமாலும், சதுர வடிவுடைய ஆவுடையாருள்ள திருமேனி பிரமனாலும் பூசிக்கப்பட்டதாகும்.
தனியேயுள்ள தேவி சந்நிதி தெற்கு நோக்கியது; இத்தலத்திற்கு தென்மேற்கேயுள்ள பறியலூரில் தந்தையான தக்கன் செய்த வேள்விக்குச் செல்லும் கோலத்தில் மேற்கு நோக்கியிருப்பதாகச் செவிவழிச் செய்தி சொல்லப்படுகிறது.
சித்திரை 7-ஆம் நாள் முதல் 18-ஆம் நாள் முடிய சூரிய ஒளி சுவாமி மீது படுவதாகச் சொல்லப்படுகிறது. (இந்நாட்களில் விடியற்காலையில் சூரிய வழிபாடு நடைபெறுகிறது.)
இக்கோயிலில் சோழர் காலத்திய ஆறு கல்வெட்டுக்கள் உள்ளன; இவை மூன்றாம் குலோத்துங்க சோழன், ராஜாதிராஜசோழ தேவர், தஞ்சை சரபோஜி மன்னர் காலத்தியவை.
இக்கோயிலின் அமைப்பு முறை ஜேஷ்டாதேவியின் பிரதிஷ்டை முதலியவைகளைக் கருத்திற்கொண்டு பார்க்கும்போது இக்கோயில் கி. பி. 879 - 907 வரை அரசாண்ட முதலாம் ஆதித்த சோழன் செய்த திருப்பணியாகக் கருத இடமுண்டு என்றும் செய்தி இவ்வாலயத் தலவரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வூரில் 8.2.1965- ல் தோற்றுவிக்கப்பட்ட 'மணிவாசக மற்றம்' மிகச் சிறப்பாக பல தெய்வீகப் பணிகளைச் செய்து வருகிறது.

9. திருக்கோயில் வரலாறு - தஞ்சைப் பெரியகோயில்

extracts

முதலாம் இராஜராஜ சோழனது திருத்தமக்கையாரும், தேவிமார்களும், அரசியல் அலுவலாளர்களும் எழுந்தருளுவித்த திரு மேனிகளும் பிரதிமங்களும் : இராஜராஜதேவர், திருத்தமக்கையார், வல்லவரையர் வந்தியத்தேவர், மகாதேவியார் ஆழ்வார் பராந்தகன் குந்தவையார், இத்திருக்கோயிலில் தம் தந்தையாராகிய பொன் மாளிகைத்துஞ்சியதேவர் (இரண்டாம் பராந்தக தேவர்) தமது தாயாராகிய வானவன் மாதேவியார், தட்சிணமேரு விடங்கரின் பிராட்டியார் உமாபரமேசு வரியார், தஞ்சை விடங்கரின் பிராட்டியார் உமா பரமேஸ்வரியார் இவர்களின் திருமேனிகளையும்;
இராஜராஜதேவர் தேவிமார்களில் ஒலோகமாதேவியார், பிச்ச தேவரையும்; திரைலோக்கிய மாதேவியார், கல்யாணசுந்தர தேவர் இவரது பிராட்டியார் இவர்களையும், அபிமானவல்லியார், இலிங்க புராணதேவர், பிரமன், விஷ்ணு இவர்களையும், சோழ மாதேவியார், இடபவாகனதேவர் இவர் தம் பிராட்டியார் உமா பரமேஸ்வரியார் இவர்களையும்; பஞ்சவன்மாதேவியார், தஞ்சை யழகர் இவர் பிராட்டியார் உமாபரமேஸ்வரியார் இவர்களையும்; இலாடமாதேவி யார் பாசுபதமூர்த்தியையும்; பிருதுவிமாதேவியார் ஷ்ரீகண்டமூர்த்தி .

இராஜராஜதேவர் அரசியல் அலுவலாளர்களில், அதிகாரிகள் காஞ்சிவாயில் உடையான் உதையதிவாகரன் தில்லையாளியாரான இராஜராஜ மூவேந்தவேளார், க்ராதார்ஜுந தேவரையும்; இராஜராஜ தேவர் பெருந்தரம் வேளான் ஆதித்தனான பராந்தகப் பல்லவரையர் உமாசகிதர், இவர் தம் பிராட்டியார்; சுப்பிரமணியதேவர், கணபதியார் இவர்களையும்; இராஜராஜதேவர் பெருந்தரம், உய்யக்கொண்டார் வள நாட்டு வெண்ணாட்டுக் கேரளாந்தகச் சதுர்வேதி மங்கலத்து நாரக்கன் ஷ்ரீ கிருஷ்ணன் மும்முடிசோழ பிரமாதிராயன், அர்த்தநாரீஸ்வரரை யும்; இராஜராஜதேவர் சிறுதனத்துப் பெருந்தரம் கோவன் அண்ணா மலையான கேரளாந்தக விழுப்பரையன், பிருங்கீசர், சூரியதேவர் இவர்களையும்; ஷ்ரீ காரியஞ்செய்த பொய்கைநாடு கிழவன் ஆதித்தன் சூரியனான தென்னவன் மூவேந்த வேளான், திருஞானசம்பந்த அடிகள், திருநாவுக்கரையதேவர், நம்பி ஆரூரனார், நங்கை பரவையார், முதலாம் இராஜராஜ சோழர், இவரது தேவியார் ஒலோக மாதேவியார், "தத்தாநமரே" என்ற மிலாடு டையார் (மெய்ப்பொருள் நாயனார்), சிறுத்தொண்ட நம்பி; திரு வெண்காட்டு நங்கை, சீராள தேவர் இவர்கள் பிரதிமங்களையும்; சந்திரசேகரதேவர், கே்ஷத்திர பாலதேவர் இவர்களின் திருமேனி களையும்; ஈராயிரவன் பல்லவரை யனான மும்முடிச்சோழ போசனான உத்தமசோழப் பல்லவரையன் சண்டேசுவரதேவரையும் எழுந்தருளுவித்துள்ளனர்.

10. செங்கதிர்த் தேவன்

''செப்பு மொழி பதினெட்டுடையாள்அவள் சிந்தை ஒன்றுடையாள்'' என்று பாரதியார் தரிசித்த பாரதத் திருநாட்டில் இமயம் முதல் குமரிவரை பல்கிப் பரந்து கிடக்கும் ஒவ்வொரு ஊரிலும், ஒவ்வொரு குக்கிராமத்திலும் காலை, மதியம், மாலை ஆகிய சந்தி நேரங்களில் ஓரிருவராவது சந்திவணக்கம் (சந்தியா வந்தனம்) கூறுவது பல ஆயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்து வரும் மரபாகும். அவ்வணக்கத்திற்குரிய ஈரடித் தோத்திரப் பாடலில் எந்தவொரு சமயக் கோட்பாட்டையோ, எந்த ஒரு சமயம் சார்ந்த தெய்வத்தையோ முன்னிருத்தித் தனக்குப் போகமும், பொருளும், பொன்னும், மணியும் வேண்டும் என்று பிரார்த்திப்பது இல்லை. மாறாகக் கண்ணெதிரே காணும் கதிரவனை நோக்கி, ''ஞானமாகிய பேரறிவினை வல்லமையோடு என்னுள் தூண்டுக'' என வேண்டுவதே அப்பாடலின் பொருளாகும். இத்துதி வேதமொழியில் முடங்கிக் கிடந்தது கண்டு பொறாத பாரதியார், ''செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம் அவன் எங்களறிவினைத் தூண்டி நடத்துக'', என்று செந்தமிழில் துதிவகுத்து பண்டை மரபுக்குப் புத்தொளி படைத்தார்.இளங்கோவடிகள் சிலம்பெனும் மாகாப்பியத்துள் ஐந்திணைத் தெய்வ வழிபாடுகளை அருகன், புத்தன், சிவன், பலராமன், காடுகான் வழி பாட்டோடு புணர்த்துக் கூறுமவர் நூலின் தொடக்கத்தில் இத்தகு வழிபாடுகள் பற்றி பேச விழையாமல், ''திங்களைப் போற்றுதும், ஞாயிறு போற்றுதும், மாமழை போற்றுதும்'' எனத் தெய்வம் அருளிய இயற்கைக் கூறுகளுக்குப் போற்றி செய்து இயற்கை மூலம் பரம்பொருளைக் காணும் அற்புத நெறியைக் காட்டுகின்றார். இம்மரபு நெறியை உச்சிமிசை போற்றும் பாரதியாரோ,''வேதம் பாடிய சோதியைக் கண்டுவேள்விப் பாடல்கள் பாடுதற்குற்றேன்நாதவார் கடல் இன்னொலி யோடுநற்றமிழ்ச் சொல் இசையும் சேர்ப்பேன்காதமாயிரம் ஓர் கணத்துள்ளேகடுகியோடும் கதிரினம் பாடிஆதவா, நினை வாழ்த்திட வந்தேன்அணி கொள் வான்முகம் காட்டுதி சற்றே''எனச் செங்கதிர்த் தேவனைப் போற்றும் பாங்கு சிந்திக்கத் தக்கதாகும்.விலங்குகள் போல் திரிந்த மனிதன் தன் ஆறாவது அறிவால் இறைத் தன்மையை இயற்கையின் வாயிலாக உணர்ந்தபோது அவன் கண்ட முதல் தெய்வம் ஆதவன்தான். தான் படைக்கும் உருவங் களில் தெய்வப்படுத்தி வணங்கிய பண்டைய உலக மரபுகள் அனைத்தும் கதிரவனுக்கு உருவம் தந்து போற்றின. தமிழகத்திலும் காலங்காலமாக இம்மரபு நெறி தழைத்தது. கல்லிலும், செம்பிலும், கவினுறு ஓவியங்களிலும் கதிரவனுக்கு உருவம் அமைத்து மகிழ்ந்தனர். சைவர்கள் சிவபெருமானின் அம்சமாக சூரியனை மதித்தனர். அதனால் தான் சிவசூரியன் என நாமமிட்டு வழிபட்டனர். வைணவர்களோ திருமாலின் அம்சமென ஆதவனைக் கொண்டதால் சூரிய நாராயணன் எனப் போற்றினர். சைவம், வைணவம், சாக்தம், காணாபத்யம், கௌமாரம் எனும் ஐவகை நெறிகளோடு சூரிய வழிபாட்டை சௌரம் எனக் கொண்டு அறுவகைச் சமய நெறியை உச்சிமிசை கொண்டு தொழுதனர்.அளவில் பெரிய ஆதவன் சிற்பங்கள்பூம்புகார் நகரில் பகல்வாயில் உச்சிக்கிழான் கோட்டம் என்ற சூரியதேவன் கோயில் இருந்தமையை இளங்கோ அடிகள் குறிக்கின்றார். அக்கோயிலில் இடம் பெற்றிருந்த சூரியதேவனின் வடிவம் எவ்வாறு இருந்தது என நாம் அறிய இயலவில்லை. இருப்பினும் கி.பி.7ஆம் நூற்றாண்டு தொட்டு தமிழகத்துத் திருக்கோயில்களில் சூரியனின் சிற்பங்கள் இடம் பெறலாயின. திருச்சிராப்பள்ளி மலையின் அடிவாரத்தில் இடம்பெற்றுள்ள குடைவரைக் கோயிலில் அறுவகைச் சமயத்திற்குரிய தெய்வத் திருவுருவங்கள் இடம் பெற்றுள்ளன. அவற்றில் ஒன்றாக ஆதவனின் திருமேனி காணப் பெறுகின்றது. ஏறத்தாழ கி.பி. 6 ?950;ம் நூற்றாண்டுப் படைப்பான இச்சூரிய தேவனின் சிற்பம்தான் தமிழகத்திலேயே மிகப்பெரிய சூரியன் வடிவமாகும்.தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் உள்ள 108 சிவாலயத்தில் இடம் பெற்றுள்ள சூரிய தேவனின் சிற்பம் கி.பி.8ஆம் நூற்றாண்டைச் சார்ந்த பல்லவர் காலப் படைப்பாகும். தனித்து செதுக்கப்பெற்ற ஆதவன் திருவுருவங்களில் இதுவே மிகப் பெரியதாகும். நீண்ட காம்புடைய தாமரை மலர்களைத் தன் இருகரங்களிலும் பிடித்தவாறு தலைக்குப் பின் ஒளிவட்டத்துடன் காணப்பெறும் இத்திருமேனி பேரழகு வாய்ந்ததாகும். திருக்காட்டுப் பள்ளி அக்னீஸ்வரர் திருக்கோயிலில் உள்ள முற்காலச் சோழர்கால சூரியனின் திருமேனி தனித்தன்மை வாய்ந்ததாகும். நின்ற கோலத்தில் தலைக்குப் பின் ஒளிவட்டத்துடன் திகழும் சூரிய தேவன் தன் இடக்கரத்தை தொடை மீது இறுத்தியவாறு, வலது கரத்தால் அபயம் கூட்டி அருளுகிறார். தமிழகத்திலேயே அபயக்கரத்துடன் திகழும் ஒரே திருமேனி இதுவாகும்.குடந்தைக் கீழ்க்கோட்டமும் ஆதவன் வழிபாடும் சூரிய வழிபாட்டிற்குச் சிறப்பிடம் அளிக்கப் பெற்ற தமிழகக் கோயில்கள் வரிசையில் தலையாய தாகப் போற்றப் பெறுவது கும்பகோணத்தில் உள்ள கீழ்க்கோட்டம் எனும் நாகேசுவர சுவாமி திருக்கோயிலாகும். இத்திருக்கோயிலின் முதற் திருச்சுற்றின் வடகிழக்குப் பகுதியில் சூரிய தேவனுக்கென எடுக்கப்பெற்ற சிற்றாலயம் ஒன்றுள்ளது. கருவறை, அர்த்த மண்டபம் ஆகியவற்றுடன் கற்றளியாகத் திகழும், இவ்வாலயத்து தேவகோட்டங்களில் சௌர விநாயகம் மற்றும் ஆதித்யன், பாஸ்கரன், ரவி, பானுமூர்த்தி ஆகிய சூரிய வடிவங்கள் இடம் பெற்றுள்ளன. கருவறையில் இரு தாமரை மலர்களைத் தாங்கியவராக சூரிய தேவன் இடம்பெற்றுள்ளார். பராந்தகசோழன் காலம் தொட்டு (கி.பி.947) இச்சூரிய தேவர் கோயிலுக்கு அளிக்கப்பெற்ற நிவந்தங்கள் பற்றி இங்குக் காணப் பெறும் கல்வெட்டுக்கள் எடுத்துரைக்கின்றன.இதே குடந்தைக் கீழ்க்கோட்டத்தில் உள்ள ஆடவல்லான் திருமண்டபம் குறிப்பிடத்தக்க சிறப்பு வாய்ந்ததாகும். சோழர்காலத்துப் படைப்பான இம்மண்டபத்தினை சுமார் 10 அடி உயரமுடைய இரண்டு தேர்க்கால்கள் தாங்கி நிற்கின்றன. அவைகளுக்கு முன்பாக விண்ணில் பாய்ந்த நிலையில் இரு குதிரைகள் அம்மண்டபத்தினை இழுத்துச் செல்வதாகக் காட்சி அளிக்கின்றன. தேர்ச் சக்கரங்களை உற்று நோக்குவோமாயின் அச்சக்கரங் களுக்கு 12 ஆரக்கால்களும், அவைகளுக்கு இடையே 12 சூரியர்களும் இருப்பதைக் காணலாம். தலைக்குப் பின் ஒளிவட்டத்துடன் கையில் தாமரை மலர்களை ஏந்திய நிலையில் இந்த பன்னிரு (துவாதச) ஆதித்தர்கள் திகழ்கின்றனர்.நடராசர் திருவடிவமோ பிரபஞ்சப் பெரு வெளியில் ஆடும் கோலமாகும். அந்தப் பெரு வெளியில் காலம் எனும் குதிரைகள் பாய்ந்து இழுக்க பன்னிரு ஆதித்தர்கள் தேர்க்கால்களாகச் சுழன்று இயங்க, பரமன் அங்கே ஆடல் வல்லானாகப் பவனி வருகிறான். இப்படைப்புகளெல்லாம் அங்கு தோற்றம் பெறுவதற்கு சில நூற்றாண்டுகளுக்கு முன்பு, கீழ்க் கோட்டத்துக் கூத்தனாரைக் கும்பிட வந்த அப்பரடிகள்,''செக்கர் ஒளி, பவள ஒளி, மின்னின் சோதிசெழுஞ் சுடர்த் தீ ஞாயிறு, எனச் செய்யர் போலும்குடந்தைக் கீழ்க் கோட்டத்து எம் கூத்தனாரே''என்றும், ''மூன்றாய்த் தோன்றும் முளை ஞாயிறன்ன மலர்க்கண் மூன்றும்'' என்றும் குறிப்பிட்டு பெருமானின் புகழுரைக்கின்றார். அப்பரடிகளின் அற்புதமான இச்சொற்கோவைகளை ஆராய்ந்த இரா.நாகசாமி அவர்கள் ஸ்ரீ ருத்ரம் கூறும்,

11. இஸ்லாமியப் படையெடுப்பும் இந்துப் படையெடுப்பும்
- ஆ. சிவசுப்பிரமணியன்

extract from the above book

உரிய ஆடையை உடுக்க வைத்து ஆகமவல்லி என்று பெயரிட்டும் ராஜராஜன் அனுப்பியதாக குறிப்பிடுகிறது. (சாஸ்திரி 1989: 347).சாளுக்கியர்களின் பழமையான நகரான கல்யாணபுரத்தைக் கைப்பற்றி அதை இடித்துத் தரைமட்டமாக்கி அங்கிருந்த ஒரு தூவாரபாலகர் உருவத்தைக் கொண்டு வந்தான். தஞ்சை மாவட்டம் தாராசுரம் கோவில் இடம்பெற்ற அப்படிமத்தின் பீடத்தில் "ஸ்ரீ விஜய ராஜேந்திரத் தேவர் கல்யாணபுரம் எரித்து கொண்டு வந்த துவார பாலர்" என்று குறிக்கப்பட்டுள்ளது. முதல் குலோத்துங்கச் சோழன் (1070---1120) இரண்டாம் கலிங்கப் போரில் (கி.பி. 1110) வென்று குதிரைகள், யானைகள், ஒட்டகங்கள் மற்றும் செல்வங்களுடன் மகளிரையும் கைப்பற்றி வந்தான். மூன்றாம் குலோத்துங்கன் (கி.பி. 1178- 1218) மதுரையின் மீது படையெடுத்து வென்ற பின்னர் அவன் செய்த செயல்களாக அவனது மெய்கீர்த்திகள் பின்வருபவனற்றைக் குறிப்பிடுகின்றன.1. பெண்கள் அடிமைகளாகக் கொண்டு செல்லப்பட்டனர்.2. தோற்றவர்களின் மூக்கு அறுக்கப்பட்டது.3. பாண்டியனின் கூட மண்டபத்தை (முடி சூட்டும் மண்டபம்) இடித்து கழுதை ஏரைப் பூட்டி உழுதனர்.திருவாரூர்த் தலைவனாக இருந்த கங்கை கொண்டான் உத்தம சோழராயனின் படையதிகாரியான கூத்தன் கணபதி என்பவனை "பகைவர்களின் மனைவியர்க்குக் கணவன்" என்று ஒரு கல்வெட்டு குறிப்பிடுகிறது (ARE 1913 ப. 97).கி.பி. 1219இல் சோழ நாட்டின் மீது படையெடுத்த முதல் மாறவர்மன் சுந்தரபாண்டியன் (1216 -1238) தனது வீரச்செயல்களை, செய்யுள் வடிவிலான மெய்கீர்த்தியாக கல்வெட்டில் பொறித்துள்ளான் (I.P.S; 290, 323) புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான் மலையில் உள்ள அக்கல்வெட்டின் உரைநடை வடிவம் வருமாறு:கொடுங் கோபமுடைய குதிரைகளையும், யானைகளையும் செலுத்திச் சென்று சோழர்களின் தஞ்சை நகரையும் செந்தழலிட்டுக் கொளுத்தினான்.அழகிய குவளை மலர்களும், நீல மலர்களும் தம் அழகை இழக்கும்படி குளங்களையும் ஆறுகளையும் கலக்கினான்.கூடம், மதில், கோபுரம், ஆடல் நிகழும் அரங்கங்கள், மாட மாளிகைகள், கருவூலங்கள் ஆகியனவற்றை இடித்துத் தள்ளினான்.தன்னை வந்து அடிபணியாத பகை மன்னர்களின் மனைவியர்கள் அழுத கண்ணீர் ஆறாக ஓடும்படிச் செய்தான்.பகைவரது நிலத்தை, கழுதை பூட்டிய ஏர் கொண்டு உழுது வெள்வரகை விதைத்தான். சோழர் தலைநகராக விளங்கிய முடிகொண்ட சோழபுரம் சென்று "விஜயாபிஷேகம்" எனனும் சடங்கை இவன் செய்தான். அதன் பொருட்டு சோழ அரசியும், அந்தப்புரத்துப் பெண்களும் தண்ணீர்க்குடம் முதலிய மங்கலப் பொருள்களை சுமந்து வரும்படி கட்டாயப்படுத்தப்பட்டனர் (சாஸ்திரி, மேலது, 579). பல்லவ மரபைச் சேர்ந்த கோப்பொருஞ்சிங்கன் என்பவன் வைதீக சமயத்தைச் சேர்ந்தவன். சிறந்த சிவ பக்தன். சிதம்பரம் நடராசர் மீது பெரும்பற்று உடையவன் என்று இவனது வரலாற்றை எழுதிய எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன் (1965: 117) குறிப்பிடுகிறார்.சைவர்களின் முக்கிய புண்ணியத் தலங்களுள் ஒன்றான சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோவிலில் தெற்குக் கோபுரம் கட்ட தானம் செய்துள்ளான். இதனால் இவனது பட்டப் பெயர் ஒன்றின் பெயரால் "சொக்கசீயன் திருநிலை எழுகோபுரம்" என்று இக்கோபுரம் அழைக்கப்பட்டது. சிதம்பரத்தின் கீழைக் கோபுரத்தை எழுநிலைக் கோபுரமாக உயர்த்திக் கட்டினான். தன் பகை மன்னர்களின் தங்கக் கிரீடங்களை உருக்கி இக்கோபுரத்தின் தங்கக் கலயங்களைச் செய்தான். திருவண்ணாமலை, காஞ்சி ஏகாம்பரநாதன் கோவில், திருவீரட்டாணம், ஜெம்புகேஸ்வரம், மதுரை, காளகஸ்தி ஆகிய சிவத்தலங்களில் திருப்பணிகளும் தானங்களும் செய்தான்."திருப்பதிகளெல்லாம் கும்பிட்டருளி தேவதானங்களும் திருவிடையாட்டங்களும் இறையிவி விட்டருளி திருப்பணியெல்லாம் செய்தருளி" என்று ஆக்கூர் சாசனம் (SI XII; 129) இவனது பக்தி உள்ளத்தைச் சுட்டிக் காட்டும்.இத்தகைய சிவபக்தனான கோப்பெருஞ்சிங்கனுக்குரிய பட்டயங்களுள் "பரராஜ அந்தப்புர பந்திகாரன்" என்பதும் ஒன்று என இவனது ஆற்றூர் சாசனம் கூறும் (SII XII; 120). பிற மன்னர்களின் அந்தப்புரத்தை சிறைபிடிப்பவன் என்பதே இப்பட்டத்தின் பொருளாகும்.தன் பகை நாடான சோழ நாட்டின் மீது படையெடுத்த இக்கோப்பெருஞ்சிங்கன் மூன்றாம் ராஜராஜனை சிறை பிடித்தான். கோப்பெருஞ்சிங்கனுடன் போரிட்ட போசல நாட்டு மன்னன் மூன்றாம் ராஜராஜனை சிறை மீட்டான். இவ்விரு நிகழ்வுகளையும் 'திருவய்ந்திரபுரக் கல்வெட்டு' குறிப்பிடுகிறது. இக்கல்வெட்டில் கோப்பொருஞ்சிங்கன் சோழநாட்டுக் கோவில்களை இடித்தசெயலும் அவனுடன் போரிட்டு வென்ற போசல நாட்டு மன்னன் செய்த கொடுஞ் செயல்களும் இடம் பெற்றுள்ளன. அக்கல்வெட்டு வருமாறு: (கல்வெட்டு வரிகளில் அழுத்தம் எமது)